இயற்கையான தமிழ்
எண்திசையும் பரவிக் கிடக்கிறது இயற்கை
பச்சையாய்,நீலமாய்,
மஞ்சளாய்,வெண்மையாய்
என் தமிழ் போல்.
செடியும் பூக்களும்
கடலும் வானமும் ஆயின
தான் தோன்றிகள்,ஆயினும்
என் தமிழ் அதற்கு முன் தோன்றியதால்
முன்னும் என் மூதாதையர் வணங்க
பின்னும் நான் வணங்கி மிச்சமிருக்கும்
தாய்த்தமிழ் காண,
சந்ததியர் காத்திருக்கின்றனர் வரிசையில்..!
நீர்ப்பூக்கள்
* அதிர்வலைகளின்
அரசல் புரசலான செய்திகேட்டு
அக்கம்பக்கத்து பூக்கள் கண்சிமிட்டும்
மஞ்சள் பூவும்,சிவப்பு பூவும்
மருதலித்ததனால் விளங்கும்
தாயானதால் தேங்கிய தண்ணீருக்கும் சம்மதம்
பூவானம்,பூமழை, பூநிலம்
உதிர்த்த நீர்ப்பூக்கள்
ஒன்றாகிக் கொண்டாடும்
உயரம் பறந்தவைகள்
சல்லெனக் கீழிறங்கி
தண்ணீர் மோதிப்பின் உயரம் தொடும்
தவளைக் குதித்தாடிய குளத்தில்,
நிலத்தை உற்றுநோக்கி
முணுமுணுக்கும் நிழல் ம் .. போதும் வாழ்க்கை
எதிர்கரையில் துணைப்பேச்சுக்கு ஆள் தேடும் வயதானகட்டை.
* சொந்த நிலம்,
சொந்த வீட்டுக்கனவுடன்
டவுனுக்கு வண்டியேறிய
திசை தெரியாப் பறவை
இல்லையென்றாலும்
(வாழ) வழி அறியாக் குழந்தைக்கு
பத்து வருட போராட்டத்தில்
இப்போதும் சொந்தமாயிருக்கிறது
காட்டுக் கொட்டாயிலிருந்த
மழைநேரத்தில், டீக்குடிக்கக்
கூட்டம் கூடும், கூரை ஒழுகும்,
அந்த சாக்குப்பை போர்த்திய புரோட்டாக்கடை.
Tuesday, 22 September 2009
எனது கவிதைகள்
Posted by
"நான் யாராக இருப்பினும் நீ எனக்கு சொந்தமே.." அந்த 'நான்' : கார்த்திக் சுப்பிரமணி
at
4:16 am
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment